Rescued From Flood damage

வணக்கங்க… நான் கோடி ஸ்வாமிகளை 2009 ல் என் அப்பாவின் நண்பர் மூலமாக முதன் முதலாக ஸ்வாமியை பற்றி தெரிந்து கொண்டேன். அதே ஆண்டு ஸ்வாமியை காணச்சென்றேன். என் மனைவி புவனேஸ்வரி குழந்தை வர்னிகாவுடன் தாத்தாவை காண சென்றோம். அப்பொழுது என் மனைவி கையில் மருக்கள் இருந்தது அது பரவ ஆரம்பித்த சமயம். தாத்தாவிடம் சென்றவர்களுக்கு வேண்டியது கிடைப்பதாக கூறினார்கள். நான் அதுபற்றி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. என் மனைவி தன் கையில் உள்ள மருவை மறைய செய்யுமாறு அங்குள்ள விபூதியை எடுத்து கையில் உள்ள மருக்கள் மேல் தேய்த்து மனதினுள் வேண்டிக்கொண்டாள். அடுத்த நாள், என் மனைவி தாத்தா விபூதியை கையில் இட்டதை காண்பித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக கையில் இருந்த மரு ஸ்வாமி விபூதி இட்ட அடுத்த நாளே மறைந்திருந்தது. அப்போது தன தாத்தாவின் சக்தி என்னவென்று எங்களுக்கு தெரிந்தது. நான் தாத்தாவை முழு ஈடுபாடோடு வணங்க ஆரம்பித்தேன். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு ஒரு கம்பெனியில் தொடர்ந்து ஒன்பதரை வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது மாத சம்பளமாக 10,000/- பெற்றுக்கொண்டிருந்தேன். திருமணத்திற்கு பின் தேவைகள் அதிகமானதால் வருமானம் போதவில்லை. சரி, வேறு வேலை தேடுவோம் என்று தேடிக்கொண்டிருந்தேன் சரியான வேலை கிடைக்கவில்லை. ஓவ்வொரு இன்டர்வியூக்கு செல்லும் பொழுது அந்த பேப்பரை தாத்தாவிடம் வைத்து வணங்கிவிட்டு தான் செல்வேன். அப்படி செல்லும் போது ஸ்வாமியிடம் இரண்டு கோரிக்கைகளை வைப்பேன். அதில் ஒன்று, இந்த வேலை கிடைக்கவேண்டும். இரண்டாவது , கிடைக்காவிட்டாலும் வருத்தப்படமாட்டேன் இதைவிட நல்லவேலை வைத்திருக்கிறீர்கள் என நினைத்துக்கொள்வேன். அப்படி இருக்கும்போது ஒரு கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு செல்லும்போது தாத்தாவின் கோவிலுக்கு சென்றேன். அங்கு ஒரு பைரவர் சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தாத்தாவிடம் சென்று நான் ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா என்று வாங்கினேன் . தாத்தா பைரவர் உருவத்திலும் வருவார்கள் என்று கூறியது கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த உருவத்தில் வந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் என வேண்டினேன். பைரவர். ஸ்வாமியை சுற்றி வரும் இரண்டாவது சுற்றுக்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது போல என் நெற்றிக்கு முன் நேராக வந்து தன் நாக்கால் நெற்றியை தீண்டி ஆசிர்வாதம் செய்தார். எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்றிருந்தேன். அந்த வேலையும் கிடைக்கவில்லை. பின்னர் நான் வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியின் சப்ளையர் ஒருவர் நீங்க சொந்த கம்பெனி வைக்க கூடாத? உங்களுக்கு நான் உதவி செய்கின்றேன் என்றார். அன்றுதான் அதிர்ஷ்டம் வந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன். அவர்களும் சொன்னது போலவே வேலையும் கொடுத்தார்கள். என் மகள் பெயரில் வர்னிகா எண்டர்பிரைசஸ் என்று கம்பெனி துவங்கினேன். 2009-ல் ISO தர சான்றிதழ் பெற்றேன். தாத்தாவின் ஆசிர்வாதத்தில் தான் படிப்படியாக ஆட்டோமொபைல் துறையில் உள்ள ஐந்து கம்பெனிகளுக்கு தொடர்ந்து சப்ளை செய்து கொண்டிருக்கிறேன். எனது கம்பெனி கிண்டி ஈக்காட்டுதாங்களில் உள்ளது. இவ்வாறு என் முன்னேற்றத்திற்கு தாத்தாவின் ஆசிர்வாதம் தான் காரணம். தாத்தாவின் வைபரேஷனை நான் தொடர்ந்து நன்றாக உணர்கிறேன். 2015ல் சென்னையில் பெய்த பெருமழையின் போது சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய கம்பெனி இருந்த பகுதி வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகும். ஆனால் எனது கம்பெனி கொஞ்சம் மேடான பகுதியில் தான் உள்ளது. எனது கம்பெனிக்கு எதிரே உள்ள கம்பெனி என் கம்பெனி அளவுக்கு தான் கட்டியுள்ளனர். ஆனால் அந்த கட்டிடத்தில் சுமார் 1அடிக்கு மேலே தண்ணீர் தேங்கி வடிந்திரூந்தது. வெள்ளம் வந்த சமயம் நான் உள்ளே சென்று பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்பு சென்று பார்க்கும்போது ஒரு அதிசயம் என்னவென்றால் வெள்ளம் வருவதற்கு முன் தாத்தா படம் ஒன்றை கம்பெனியில் வைத்திருந்தேன். ஒரு சொட்டு வெள்ளம் கூட கம்பனிக்குள் புகவில்லை. மற்ற கம்பெனிகள் எல்லாம் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளது. தாத்தாவின் ஆசிர்வாதத்தால் இந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. எல்லா சூழ்நிலையிலும் ஸ்வாமிகள் உடன் இருந்து பாதுகாக்கின்றர். நாமக்கல் கோடீஸ்வரன் அவர்கள் எனக்கு தாத்தாவை அறிமுகம் செய்துவைத்தார். எனக்கு எதாவது கஷ்டம் என்றால் நான் அவரிடம் செல்வேன். அவர் எனக்காக தாத்தாவிடம் வேண்டுவார். இதை எதற்கு கூறுகின்றேன் என்றால் தாத்தா தன் வட்டத்தை அவருடன் விடாமல் நாமக்கல் கோடீஸ்வரன் அவர்கள், சென்னை பாமா பாலாஜி அவர்கள், கோதவாடி இரத்தினம் அவர்கள், தண்டையார் பேட்டை ஏகாம்பரம் அவர்கள், நாககேஸ்வரன் அவர்கள், மாரிமுத்து அவர்கள், குணசேகரன் அவர்கள், ஆகிய அனைவரையும் சிறந்த ஆன்மீகவாதியாகவும், அனுபவம் மிக்கவர்களாகவும் இன்றும் நான் தாத்தாவை இவர்கள் உருவத்தில் பார்க்கின்றேன். – விஜயகுமார், சென்னை