கோடிஸ்வாமிகள்

சித்த புருஷர்களும் முக்த புருஷர்களும்

அன்னை பாரத தேசம் முழுக்க ஞானிகள், முனிவர்கள் மற்றும் துறவிகள் வியாபித்து இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு வகை உண்டு. முக்த புருஷர் மற்றும் சித்த புருஷர்.

தான் பரம்பொருள் என்று உணர்ந்து அதோடு இணைந்து விட்ட ஆத்ம ஞானம் உள்ளவர்களே முக்த புருஷர்கள். ஆன்மீக பரிமாணங்கள் அவர்கள் மூலமாக வெளிப்படும்.
இயல்பு வாழ்க்கையில் இருந்து கொண்டு அவர்களால் ஆன்மீக பரிமாணங்களை தேடி அதில்
பல சிகரங்களை தொட முடியும்.

சித்த புருஷர்கள் எல்லோருமே முழு உணர்தல் அடைந்து, சாமானிய வாழ்க்கை தாண்டி ஒரு யோக நிலையில் வாழும் ஆத்மாக்கள்.
நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது அவர்களின் செயலும், வாழ்க்கையும். சித்த சக்தி மூலம் பல அதிசயங்கள், அமானுஷ்ய சிந்தனைகளை சிந்தித்து கொண்டு இருப்பர்.
அன்றாட செயல்களான உணவு பழக்க வழக்கங்கள் கூட வித்யாசமாக இருக்கும்

நெடு நாள் உபவாசமும், அளவுக்கு மீறி உண்பதும் அவர்களின் அமானுஷ்ய நடவடிக்கைகள்.
அப்படி இருந்தும் அவர்கள் உடலில் எந்த மாற்றமும் இருக்காது.
சகல ஜீவராசிகளுக்கும் அன்பு செலுத்துவதில் முக்த புருஷர்களும் சித்த
புருஷர்களும் ஒன்றாய் சிந்திக்க கூடியவர்கள். அவர்கள் ஏழை மக்களுக்கு உதவதில் ஒரு கணமும் யோசிக்க மாட்டார்கள்

முக்த புருஷர்களின் போதனைகள் மிகவும் தெளிவாக, குறிப்பிட்ட வரைமுறைக்கு உட்பட்டது.
சித்த புருஷர்கள் மக்களுக்கு அவர்களின் ஆமானுயஷ வழிமுறைகள் மூலம் தங்களின் சித்தாந்தங்களை கொண்டு செல்வார்கள்.
பெரும்பாலும் அது அறிவு கண் கொண்டு பார்க்க கூடிய விஷயங்கள் இல்லை.

சித்த புருஷர் கோடி சுவாமி

புரவிபாளையத்தில், ஒரு ஜமீன்தாரின் அரண்மனையில் ஸ்வாமிகள், அவரது பூத உடலில் இருக்கும் வரை அங்கு இருந்து வந்தார் .

25 வருடங்களுக்கு முன்பு ஜமீன்தாரின் மனைவி கோடி ஸ்வாமிகளை தரிசிக்க சென்றார்.
அப்பொழுது அவர் தானே சென்று ஜமீன்தாரின் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.

புரவிபாளையம் வந்த பின்பு அந்த அரண்மனை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு அவர் மேல் மாடியில் உள்ள ஒரு முலையை தேர்ந்து எடுத்தார்.
அதன் பின்பு அவர் அங்கிருந்து இறங்க வில்லை.
அவர் எப்போதும் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை ’ கோடி’. அதனாலேயே கோடி ஸ்வாமிகள் என மக்கள் அவரை கூப்பிட்டு வந்தனர்.

Oct 11,1994 ஆம் ஆண்டு, அஷ்டமி திதியில் ஸ்வாமிகள் சித்தி அடைந்தார்.