அன்னப்பிரசாதம்


Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 12 in /home/customer/www/kodiswamigal.com/public_html/wp-content/plugins/js_composer/include/classes/shortcodes/vc-basic-grid.php on line 184

தனுஷ்கோடி:
பித்ருக்களுக்கு ப்ரீத்தி பண்ணுகின்ற பூமி. பித்ருக்களுக்கு அன்னமிட்டால், பித்ருக்கள் சாபம் நீங்கும். ஸ்ரீ ல ஸ்ரீ பொன்முடி கோடி ஸ்வாமிகள் அங்கே நின்று தவம் பண்ணிய பூமி என்பதால் அங்கு அன்னதானம் செய்வது சிறப்பு என்பது கோடி தாத்தாவின் வாக்கு.

புரவிபாளையம்:
ஸ்வாமிகள் தனுஷ்கோடியில் தவம் புரிந்து பின்பு, தானே விருப்பப்பட்டு புரவிபாளையம் வந்து அங்கேயே வாழ்ந்து பிருந்தாவனம் அடைந்த இடம்.
அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதால், அவருக்கு பிடித்த கோடி கோடி அன்னதானம், அவர் வாழ்ந்த இடத்தில் செய்வது தனி மகிமை.

திருவண்ணாமலை:
ஸ்வாமி தேர்ந்தெடுத்த பூமி, சிவனே சித்தராக இருக்கும் இடம், அவர் விருப்பப்பட்டு இங்கு அன்னதான நிகழ்ச்சியை தானே அமைத்து கொண்டார். திருவண்ணாமலையில் ஒரு அடியார்க்கு உணவு படைப்பது என்பது 100 அடியார்க்கு உணவு கொடுப்பது போன்றதாகும். பகலில் அங்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்படுவதால், இங்கு இரவில் அன்னதானம் சிற்றுண்டியாக வழங்கப்படுகின்றது.

பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள சின்ன கோட்டை குப்பம் என்ற இடத்தில், முத்து குமரன் என்பவர் தன்னுடைய சொந்த இடத்தில் ஸ்வாமிக்கு ஆலயம் எழுப்பி அங்கு நிதியமும் பிரசாதம் வழங்கபடுகின்றது.

புனே:
ஸ்வாமிகள் உலகம் பூரா கோடி கோடி அன்னதானம் என்று சொன்னதால் மேற்கண்ட மூன்று இடத்தில் ஆரம்பித்தவுடன் பாண்டிச்சேரி மற்றும் புனேயில் சென்று அமர்ந்து பஞ்சபூதங்களுக்கு அன்னம் வழங்கு என சொன்னதால், புனேயில் அன்னதான நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. புனே ஷீரடி பாபாவின் பூமி, ஷிரிடி பாபாவும் கோடி தாத்தாவும் ஒன்றுதான் என்று தன் பக்தர்கள் பல பேர்களுக்கு காட்சி அளித்திருப்பதால் அங்கு ஒரு ஜெயின் பக்தர் அமூல் என்பவர் நமது டிரஸ்ட் சார்பாக தினந்தோறும் அன்னதான நிகழ்ச்சி செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்.

மேற்கண்ட 5 இடங்களிலும் அன்னதான நிகழ்ச்சிகள் நாள்தோறும் தங்குதடையின்றி அனைவரது பேராதரவுடன் நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் தங்களது திருமணநாள், பிறந்தநாள் மற்றும் வேண்டுதல்கள் பேரில் அன்னதானம் கொடுக்கலாம்.